6. (நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான்.
الترجمة التاميلية
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِ وَقَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِمُ ٱلۡمَثُلَٰتُۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ لِّلنَّاسِ عَلَىٰ ظُلۡمِهِمۡۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلۡعِقَابِ
(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன்.
الترجمة التاميلية - عمر شريف