33. (வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரை அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்து விடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி, அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து கருணை புரிவான்.(எனினும், நிர்ப்பந்தித்தவன் பாவி ஆகிவிடுவான்.)
الترجمة التاميلية
وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ
விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கல் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்கு உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும் அதற்கான பொருளை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
திருமணத்திற்கு வசதி பெறாதவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் நிறைவு செய்கிற வரை ஒழுக்கமாக இருக்கட்டும். உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (உரிமைப்) பத்திரம் எழுதிட விரும்புபவர்கள் - அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல தன்மையையும்) அறிந்தால் அவர்களுக்கு (உரிமைப் பத்திரம்) எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடுங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் பொருளை விரும்பியதற்காக உங்கள் பெண் அடிமைகளை விபசாரத்தில் நிர்ப்பந்திக்காதீர்கள் -அவர்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். யார் அவர்களை நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் (அவர்களை) மன்னிப்பவன்,(அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف