13. லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَإِذۡ قَالَ لُقۡمَٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَيَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِيمٞ
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
Jan Trust Foundation - Tamil translation
லுக்மான் தனது மகனுக்கு -அவர் அவருக்கு உபதேசித்தவராக- கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.
الترجمة التاميلية - عمر شريف