30. இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
الترجمة التاميلية
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ
எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.
Jan Trust Foundation - Tamil translation
அது, (மேற்கூறப்பட்ட அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை யானவன், இன்னும் நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) பொய்யானவை, இன்னும் நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்.
الترجمة التاميلية - عمر شريف