12. இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
الترجمة التاميلية
وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீராக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Jan Trust Foundation - Tamil translation
இரண்டு கடல்களும் சமமாகாது. இது (-இதன் பானம்) அதை குடிப்பதற்கு இலகுவான, மதுரமான, சுவையானதாகும். (மற்ற) இதுவோ மிகவும் கசப்பான உவர்ப்பானது. (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான கறியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்த கடல்களில்) கப்பல்களை (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கின்றீர், நீங்கள் அவனது அருள்களிலிருந்து (உங்களுக்கு விதிக்கப்பட்டதை) நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்த கப்பல்களில் உங்களை பயணிக்க வைத்தான்).
الترجمة التاميلية - عمر شريف