17. எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்.
الترجمة التاميلية
وَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) "உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது" என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
எவர் தனது பெற்றோரை நோக்கி உங்கள் இருவருக்கும் “ச்சீ” கேவலம், நான் (இறந்த பின்னர் மண்ணறையில் இருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவேன் என்று என்னை எச்சரிக்கிறீர்களா? எனக்கு முன்னர் பல தலைமுறைகள் திட்டமாக சென்றுள்ளனர். அவ்விருவரும் (அவனது தாய், தந்தையும்) அல்லாஹ்விடம் (அவனது நேர்வழிக்காக) உதவி தேடுகின்றனர். (தங்களது மகனை நோக்கி) “உனக்கு என்ன கேடு! நீ நம்பிக்கை கொள்! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே!” (என்று கூறினார்கள்). அதற்கு அவன் கூறுகிறான்: “இது (-நீங்கள் கூறுவதைப் போன்று மறுமையில் எழுப்பப்படுவதும் சொர்க்கமும் நரகமும்) முன்னோரின் கதைகளே தவிர வேறு இல்லை.”
الترجمة التاميلية - عمر شريف