35. (நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.)
الترجمة التاميلية
فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۭۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ
"(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
Jan Trust Foundation - Tamil translation
தூதர்களில் மிகவும் வீரமிக்கவர்கள் (-மிக உறுதியுடையவர்கள்) பொறுத்தது போன்று (நபியே!) நீரும் பொறுமை காப்பீராக! அவர்களுக்காக (- நிராகரிப்பாளர்களுக்காக வேதனையை) அவசரமாக கேட்காதீர்! அவர்கள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கின்ற நாளில் பகலில் சில மணிநேரம் தவிர அவர்கள் (இவ்வுலகில்) தங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். இது (-இந்த குர்ஆன்) எடுத்து சொல்லப்படும் செய்தியாகும். (அல்லாஹ்வின் தண்டனை வரும்போது) பாவிகளான மக்களைத் தவிர மற்றவர்கள் அழிக்கப்படுவார்களா? (இல்லை, பாவிகள்தான் அழிக்கப்படுவார்கள்.)
الترجمة التاميلية - عمر شريف