8. (நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
அல்லது, "இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக "நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்" என்று (நபியே! நீர் கூறும்).
Jan Trust Foundation - Tamil translation
இதை இவர் (-நமது தூதர்) இட்டுக்கட்டினார் என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும் போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (பரிந்துரை செய்ய) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே சாட்சியால் போதுமானவன். அவன்தான் மகா மன்னிப்பாளன் மகா கருணையாளன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف