20. ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். (அவற்றில்) இதை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்துவிட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களைவிட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்.
الترجمة التاميلية
وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةٗ تَأۡخُذُونَهَا فَعَجَّلَ لَكُمۡ هَٰذِهِۦ وَكَفَّ أَيۡدِيَ ٱلنَّاسِ عَنكُمۡ وَلِتَكُونَ ءَايَةٗ لِّلۡمُؤۡمِنِينَ وَيَهۡدِيَكُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் உங்களுக்கு அதிகமான கனீமத்துகளை வாக்களித்தான். அவற்றை நீங்கள் பெறுவீர்கள். (அவற்றில்) இதை (-கைபர் யுத்தத்தின் கனீமத் பொருட்களை) அவன் உங்களுக்கு விரைவாக கொடுத்தான். (பிற) மக்களின்கரங்களை உங்களை (விட்டும் உங்கள் குடும்பத்தை) விட்டும் அவன் தடுத்தான். (நம்பிக்கையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல்லாஹ் பாதுகாத்தது) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் இறை அத்தாட்சியாக இருப்பதற்காகவும் உங்களை நேரான பாதையில் வழி நடத்துவதற்காகவும் (அவன் உங்களை விட்டும் எதிரிகளின் கரங்களை தடுத்து உங்களை பாதுகாத்தான்).
الترجمة التاميلية - عمر شريف