118. அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்.)
الترجمة التاميلية
إِن تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَۖ وَإِن تَغۡفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).
Jan Trust Foundation - Tamil translation
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால்... நிச்சயமாக நீதான் மிகைத்தவன், ஞானவான்.”
الترجمة التاميلية - عمر شريف