16. (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.
الترجمة التاميلية
يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்;. இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்;. மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்தின் பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான். இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
الترجمة التاميلية - عمر شريف