22. (அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்.
الترجمة التاميلية
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوۡمٗا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدۡخُلَهَا حَتَّىٰ يَخۡرُجُواْ مِنۡهَا فَإِن يَخۡرُجُواْ مِنۡهَا فَإِنَّا دَٰخِلُونَ
அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான ஒரு சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்'' என்றனர்.
الترجمة التاميلية - عمر شريف