Surah Ash-Sharh in தமிழ்
سورة الشرح · Verses: 8 · Meccan
Translation: தமிழ் translation 1 (الترجمة التاميلية)
-
1
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா? -
2
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம். -
3
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது. -
4
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம். -
5
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. -
6
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرࣰا
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. -
7
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக. -
8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!