Surah At-Tin in தமிழ்
سورة التين · Verses: 8 · Meccan
Translation: தமிழ் translation 1 (الترجمة التاميلية)
-
1
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக! -
2
وَطُورِ سِينِينَ
2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக! -
3
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
3. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, -
4
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمࣲ
4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம். -
5
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம். -
6
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونࣲ
6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு. -
7
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
7. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்? -
8
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
8. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?