30. (நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் ஒரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீர் ஓதிக் காண்பித்து வருவீராக. எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். (நபியே! அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அவன்தான் என் இறைவன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவருமில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்.''
الترجمة التاميلية
كَذَٰلِكَ أَرۡسَلۡنَٰكَ فِيٓ أُمَّةٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهَآ أُمَمٞ لِّتَتۡلُوَاْ عَلَيۡهِمُ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَهُمۡ يَكۡفُرُونَ بِٱلرَّحۡمَٰنِۚ قُلۡ هُوَ رَبِّي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ مَتَابِ
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக! “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”
الترجمة التاميلية - عمر شريف