42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வோர் ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகிறான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
الترجمة التاميلية
وَقَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَلِلَّهِ ٱلۡمَكۡرُ جَمِيعٗاۖ يَعۡلَمُ مَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٖۗ وَسَيَعۡلَمُ ٱلۡكُفَّـٰرُ لِمَنۡ عُقۡبَى ٱلدَّارِ
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே. (அவன் நாடியதே நடக்கும்.) ஒவ்வொரு ஆன்மாவும் செய்வதை அவன் அறிவான். ஆகவே, எவருக்கு மறுமையின் (நல்ல) முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் (விரைவில்) அறிவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف