7. ‘‘(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனி டமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்ய வேண்டுவது உமது கடமை இல்லை. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்.
الترجمة التاميلية
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦٓۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٞۖ وَلِكُلِّ قَوۡمٍ هَادٍ
இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
“(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்(கள்). (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு.
الترجمة التاميلية - عمر شريف