27. அதற்கு மூஸா, (அவனை நோக்கி) ‘‘கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَقَالَ مُوسَىٰٓ إِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٖ لَّا يُؤۡمِنُ بِيَوۡمِ ٱلۡحِسَابِ
மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
Jan Trust Foundation - Tamil translation
மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், உங்கள் இறைவனிடம் (அல்லாஹ் ஒருவனிடம்) விசாரணை நாளை (மறுமையை) நம்பிக்கை கொள்ளாத பெருமை அடிக்கின்ற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”
الترجمة التاميلية - عمر شريف