3. அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
الترجمة التاميلية
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருவதை அங்கீகரிப்பவன், தண்டிப்பதில் கடுமையானவன், அருள் உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (யாரும்) இல்லை. அவன் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.
الترجمة التاميلية - عمر شريف