31. (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்'' என்றும்,
الترجمة التاميلية
مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ
"நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் 'ஆது', 'ஸமூது'டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
Jan Trust Foundation - Tamil translation
நூஹுடைய மக்கள், ஆது, சமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையான வேதனையைப் போன்று (ஒரு வேதனை உங்கள் மீது வருவதை நான் பயப்படுகிறேன்.) அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகின்றவனாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف