37. மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை.
الترجمة التاميلية
أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ
"(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
Jan Trust Foundation - Tamil translation
வானங்களின் வாசல்களில் நான் (ஏறி) மூசாவின் கடவுளை எட்டிப்பார்க்க வேண்டும். நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன். இவ்வாறுதான் ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
الترجمة التاميلية - عمر شريف