85. ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
الترجمة التاميلية
فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
ஆனால், அவர்கள் நமது தண்டனையை பார்த்த போது அவர்களின் ஈமான் - நம்பிக்கை அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது (முன் சென்ற) அடியார்கள் விஷயத்தில் சென்றுவிட்ட அல்லாஹ்வின் நடைமுறையைத்தான் (இவர்களுக்கும் அல்லாஹ் செய்து காட்டினான்). அப்போது நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைந்தார்கள்.
الترجمة التاميلية - عمر شريف