62. (நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே!
الترجمة التاميلية
وَتَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يُسَٰرِعُونَ فِي ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَأَكۡلِهِمُ ٱلسُّحۡتَۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அவர்களில் அதிகமானவர்களை பாவத்திலும், அநியாயத்திலும், ஆகாத செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக (நீர்) காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது!
الترجمة التاميلية - عمر شريف