77. ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
الترجمة التاميلية
قُلۡ يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ غَيۡرَ ٱلۡحَقِّ وَلَا تَتَّبِعُوٓاْ أَهۡوَآءَ قَوۡمٖ قَدۡ ضَلُّواْ مِن قَبۡلُ وَأَضَلُّواْ كَثِيرٗا وَضَلُّواْ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
"வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ; ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Jan Trust Foundation - Tamil translation
"வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.'' என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف