80. அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.
الترجمة التاميلية
تَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يَتَوَلَّوۡنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَهُمۡ أَنفُسُهُمۡ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَفِي ٱلۡعَذَابِ هُمۡ خَٰلِدُونَ
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களில் அதிகாமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்புவைப்பதை (நபியே!) காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியன கெட்டு விட்டது. வேதனையில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف