10. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.
الترجمة التاميلية - عمر شريف