سورة الشمس

الترجمة التاميلية

الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الشمس இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية

الناشر

مجمع الملك فهد

Verse 1
1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
Verse 2
2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
Verse 3
3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
Verse 4
4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
Verse 5
5. வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
Verse 6
6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
Verse 7
7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
Verse 8
8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
Verse 9
9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
Verse 10
10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
Verse 11
11. ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
Verse 12
12. அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
Verse 15
15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
تقدم القراءة