15. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன).
الترجمة التاميلية
وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ طَوۡعٗا وَكَرۡهٗا وَظِلَٰلُهُم بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ۩
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன் அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸங்தா செய்கின்றன).
Jan Trust Foundation - Tamil translation
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்பந்தமாகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றனர்; காலை(களில்) இன்னும் மாலைகளில் அவர்களின் நிழல்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றன).
الترجمة التاميلية - عمر شريف