36. (நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீர் (அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கிறேன்; நானும் அவனிடமே திரும்பச் செல்வேன்'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَفۡرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَۖ وَمِنَ ٱلۡأَحۡزَابِ مَن يُنكِرُ بَعۡضَهُۥۚ قُلۡ إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ وَلَآ أُشۡرِكَ بِهِۦٓۚ إِلَيۡهِ أَدۡعُواْ وَإِلَيۡهِ مَـَٔابِ
எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) கூட்டங்களில் உண்டு. “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருக்கவும்தான்; அவன் பக்கமே அழைக்கிறேன்; அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது”என்று கூறுவீராக!
الترجمة التاميلية - عمر شريف