53. (நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.''
الترجمة التاميلية
۞وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் மீது கடுமையாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தரிபவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف