30. அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து ‘‘ மூஸாவே! நிச்சயமாக அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நான்தான்'' என்ற சப்தத்தைக் கேட்டார்.
الترجمة التاميلية
فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ مِن شَٰطِيِٕ ٱلۡوَادِ ٱلۡأَيۡمَنِ فِي ٱلۡبُقۡعَةِ ٱلۡمُبَٰرَكَةِ مِنَ ٱلشَّجَرَةِ أَن يَٰمُوسَىٰٓ إِنِّيٓ أَنَا ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து "மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!" என்று கூப்பிடப்பட்டார்.
Jan Trust Foundation - Tamil translation
அவர் அதனிடம் (அந்த நெருப்புக்கு அருகில்) வந்தபோது பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து அந்த மரத்தின் புனித இடத்தில் (இவ்வாறு) சப்தமிட்டு அழைக்கப்பட்டார்: அதாவது, “மூசாவே! நிச்சயமாக நான்தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன்.”
الترجمة التاميلية - عمر شريف