38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான்.
الترجمة التاميلية
وَقَالَ فِرۡعَوۡنُ يَـٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ مَا عَلِمۡتُ لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرِي فَأَوۡقِدۡ لِي يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجۡعَل لِّي صَرۡحٗا لَّعَلِّيٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ مِنَ ٱلۡكَٰذِبِينَ
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்; "பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்" என்றே கருதுகின்றேன்.
Jan Trust Foundation - Tamil translation
ஃபிர்அவ்ன் கூறினான்: “பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுள் உங்களுக்கு இருப்பதை நான் அறியமாட்டேன். ஆகவே, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். முகடுள்ள ஒரு உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூசாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.” (அவ்வாறு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஏறி, வானத்தை நோக்கி அவன் அம்பெறிய, அது இரத்தக் கரையுடன் திரும்பி வந்தவுடன், நான் மூசாவின் இறைவனை கொன்றுவிட்டேன் என்றான்.)
الترجمة التاميلية - عمر شريف