37. அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்).
الترجمة التاميلية
وَهُمۡ يَصۡطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ أَوَلَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ فَذُوقُواْ فَمَا لِلظَّـٰلِمِينَ مِن نَّصِيرٍ
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்).
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் அதில் கதறுவார்கள்: “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்.” அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற (காலம்)வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார். ஆகவே, (இந்த வேதனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
الترجمة التاميلية - عمر شريف