35. எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
الترجمة التاميلية
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ
"(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்" (என்றும் அவர் கூறினார்).
Jan Trust Foundation - Tamil translation
இவர்கள் தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கின்றார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிக்கின்றவர்கள் அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகின்றான்.
الترجمة التاميلية - عمر شريف