42. தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்.
الترجمة التاميلية
تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّـٰرِ
"நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
Jan Trust Foundation - Tamil translation
நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். நான் உங்களை மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் பக்கம் அழைக்கின்றேன்.
الترجمة التاميلية - عمر شريف