46. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை மிகக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.
الترجمة التاميلية
ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).
Jan Trust Foundation - Tamil translation
(அந்த வேதனை) நரக நெருப்பாகும். அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள். மறுமை நிகழும் நாளில் ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான வேதனையில் நுழையுங்கள் (என்று சொல்லப்படும்).
الترجمة التاميلية - عمر شريف