10. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்ற தண்டணைகளே நிகழும்.
الترجمة التاميلية
۞أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ دَمَّرَ ٱللَّهُ عَلَيۡهِمۡۖ وَلِلۡكَٰفِرِينَ أَمۡثَٰلُهَا
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் பூமியில் பயணித்து, தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அதைப் போன்ற முடிவுகளே (-முந்திய சமுதாயத்தவர்களுக்கு நிகழ்ந்த இறைத் தண்டனைகள் போன்றுதான்) இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்.
الترجمة التاميلية - عمر شريف