34. எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்துவிடுகிறார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ
நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ, பிறகு, தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கின்ற நிலையில் மரணித்தார்களோ - அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف