38. (மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
الترجمة التاميلية
هَـٰٓأَنتُمۡ هَـٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள்தான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். உங்களில் கருமித்தனம் செய்பவரும் இருக்கின்றார். எவர் கருமித்தனம் செய்வாரோ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால் தான். (அவருடைய ஆன்மா - உள்ளம் கொடைத் தன்மையுடையதாக இருந்திருந்தால் அவர் கருமித்தனம் செய்திருக்க மாட்டார். மாறாக, அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்திருப்பார்.) அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (உண்மையான செல்வந்தன்) ஆவான். நீங்கள்தான் (எல்லா வகையிலும்) தேவையுள்ளவர்கள் (ஏழைகள்) ஆவீர்கள். நீங்கள் விலகிச்சென்றால் நீங்கள் அல்லாத ஒரு சமுதாயத்தை அவன் மாற்றுவான். பிறகு, அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف