116. அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
الترجمة التاميلية
وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَ مَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِي نَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلۡغُيُوبِ
இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் கூறும் சமயத்தை நினைவு கூறுங்கள்: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف