17. எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية
لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருமடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவான்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியதை படைக்கிறான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية - عمر شريف