18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் ‘‘நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய அன்பிற்குரியவர்கள்'' என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறாயின், உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுடைய பிள்ளைகளல்ல. ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கிறது.
الترجمة التاميلية
وَقَالَتِ ٱلۡيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحۡنُ أَبۡنَـٰٓؤُاْ ٱللَّهِ وَأَحِبَّـٰٓؤُهُۥۚ قُلۡ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُمۖ بَلۡ أَنتُم بَشَرٞ مِّمَّنۡ خَلَقَۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ
யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
Jan Trust Foundation - Tamil translation
யூதர்களும், கிறித்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்'' என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: "அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான்? மாறாக, நீங்கள் அவன் படைத்தவர்களில் உள்ள மனிதர்கள் ஆவீர். (அவனுடைய பிள்ளைகளல்ல.) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இன்னும், அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அவனளவில்தான் மீளுமிடம் இருக்கிறது.
الترجمة التاميلية - عمر شريف