23. (இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية
قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِمَا ٱدۡخُلُواْ عَلَيۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.
Jan Trust Foundation - Tamil translation
(அல்லாஹ்வை) பயப்படுபவர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), "நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். அதில் நீங்கள் நுழைந்தால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை (தவக்குல்) வையுங்கள்'' என்று கூறினர்.
الترجمة التاميلية - عمر شريف