4. (நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
الترجمة التاميلية
يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: "நல்லவை இன்னும் (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள், வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காகத் தடுத்தவற்றிலிருந்து (அவை இறந்தாலும்) புசியுங்கள். (அவற்றை ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கிடுவதில் தீவிரமானவன்.
الترجمة التاميلية - عمر شريف