41. (நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு.
الترجمة التاميلية
۞يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّـٰعُونَ لِلۡكَذِبِ سَمَّـٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
தூதரே! "நம்பிக்கை கொண்டோம்'' என்று தங்கள் வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களிலிருந்தும் யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் தீவிரம் காட்டுபவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். (அவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவும் அதிகம் செவிமடுக்கின்றனர். (இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "நீங்கள் (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை எடுங்கள். நீங்கள் அதை கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் எதையும் (செய்ய நீர்) உரிமை பெறமாட்டீர். அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. அவர்களுக்கு, இம்மையில் இழிவுண்டு. இன்னும் மறுமையில் அவர்களுக்கு பெரிய வேதனையுண்டு.
الترجمة التاميلية - عمر شريف