53. நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.
الترجمة التاميلية
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ إِنَّهُمۡ لَمَعَكُمۡۚ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَأَصۡبَحُواْ خَٰسِرِينَ
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நாங்களும் உங்களுடன்தான் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். அவர்களுடைய (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
الترجمة التاميلية - عمر شريف