69. நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّـٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف