7. (யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية
وَٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمِيثَٰقَهُ ٱلَّذِي وَاثَقَكُم بِهِۦٓ إِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், "செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்'' என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூறுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف