94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
الترجمة التاميلية
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَيَبۡلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَيۡءٖ مِّنَ ٱلصَّيۡدِ تَنَالُهُۥٓ أَيۡدِيكُمۡ وَرِمَاحُكُمۡ لِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلۡغَيۡبِۚ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை பயப்படுபவரை அல்லாஹ் அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
الترجمة التاميلية - عمر شريف