27. (நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்.
الترجمة التاميلية
فَلَمَّا رَأَوۡهُ زُلۡفَةٗ سِيٓـَٔتۡ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُواْ وَقِيلَ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَدَّعُونَ
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.
الترجمة التاميلية - عمر شريف